Saturday, 15 August 2015

கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில் சுதந்திர தின விழா

பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா  கொண்டாட்டத்தை கல்வி  குழுமத்  தாளாளர்   எஸ்.மோகனரங்கன்  தலைமையேற்று  தேசியக் கொடி  ஏற்றி  வைத்தார்.  முதன்மை  முதல்வர்  முனைவர். சொ. ராமசுப்ரமணியன்  சிறப்புரை  ஆற்றினார். தொடர்ந்து  மாணவ  மாணவியரின்  கவின் மிகு  கலை  நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.  பரணி  வித்யாலயா  துணை  முதல்வர்  பிரியா வரவேற்றார்.  பரணி  பார்க்  முதல்வர்  சேகர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் திரு. சுரேஷ், துணை முதல்வர்கள் மற்றும் பள்ளியின் சாரண ஆசிரியர்களும், சாரண மாணவர்களும் செய்திருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சுதந்திர இந்தியாவிற்கு பாடுபட்ட தேசத்தலைவர்களின் உருவங்களை அணிந்து மாணவ, மாணவிகள் வேடம் போட்டு நாடகங்கள் மற்றும் நடனங்களில் இடம்பெற்றனர். இந்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில்

பரிசு வழங்கப்பட்டது

No comments:

Post a Comment