Tuesday, 18 August 2015

18 08 15 Karur teachers Follow up News Vis







கரூரில் ஆசிரியர்
கலந்தாய்வில் கல்வித்துறை அமைச்சுப் பணியாளரை அவமானமாக பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை
எடுக்க கோரி – அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்கள் கூட்டுக் குழு உருவாக்கம்
– துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் படி பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு
கல்வித்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைத்து சங்கங்களின் கூட்டுக் குழு கரூரில் அறிவிப்பு
கரூர் லைட் ஹவுஸ்
கார்னர் பகுதியில் அமைந்துள்ள கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்
கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று (17-08-15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்
கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி அவர்களது போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்
போது பெரியசாமி என்ற ஆசிரியர் தேவையில்லாமல் அமைச்சுப்பணியாளர்களை அவமானமாக பேசியதாக
தெரியவந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர் மலை ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான பெரியசாமியை கண்டித்து கரூரில் உள்ள அதே குமரன்
உயர்நிலைப்பள்ளியில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர்
சங்கம், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்க
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அமைச்சுப் பணியாளரை தேவையில்லாமல்
அவமானமாக பேசிய பெரியசாமி என்பவரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள்
நடத்துவது என்றும், மேலும் 22 ம் தேதி அந்த ஆசிரியரை கண்டித்து அதாவது எந்த பள்ளியில்
வைத்து அவமானமாக பேசினாரோ அதே பள்ளியின் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது என தெரிவிக்கப்பட்டது.


பேட்டி : சு.பாரதிதாசன்
– தமிழ்நாடு அலுவலகப்பணியாளர்கள் சங்கம் – மாநில இணை செயலாளர்

No comments:

Post a Comment