Sunday, 2 August 2015

கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் முதல் சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சின்னமலையின் 210 வது நினைவு நாள் நிகழ்ச்சி

முதல் இந்திய சுதந்திர போராட்டத் தியாகி மாவீரன் தீரன் சின்னமலையின் 210 வது நினைவு நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் தனியரசு தலைமையில் அக்கட்சியினர் ஓடா நிலைக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். இதை முன்னிட்டு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசுவின் தலைமையை வலுப்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட மாவட்ட செயலாளர் த.கார்வேந்தன் தலைமையில் கொங்கு இனமக்கள் ஏராளமானோர் அணி திரண்டு புறப்பட்டனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலையின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலையை அஞ்சலியாக செலுத்தி அவரின் வீரத்தை மாவட்ட செயலாளர் த.கார்வேந்தன் பறைசாட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் ம.செல்வி, மாவட்ட மாணவரணி செயலாளர் ப.திருமுருகேஷ், நகர செயலாளர் குறிஞ்சி பால்கர், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் சிவசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, க.பரமத்தி ஒன்றிய பொறுப்பாளர் பிரபு, க.பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், புஸ்பராஜ், தாந்தோன்றிமலை நகர செயலாளர் P.கனகராஜ், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பாலு, அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் திருவோனம் கந்தசாமி, மாவட்ட பிரச்சார குழு தீரன் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாவீரனின் தீரன் சின்னமலையின் புகழை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து அவரின் நினைவை அனுசரிக்கும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கரூர் மாவட்ட சார்பில் வாகனங்கள் பேரணியாக புறப்பட்டு, புலியூர், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, சங்ககிரி கோட்டை சென்று அங்குள்ள ஓடாநிலைக்கு சென்றனர். சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் தீரன் சின்னமலைக்கு நினைவு கூட்ட நடந்த இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின்  தாந்தோன்றிமலையில் நகர செயலாளர் P.கனகராஜ் தலைமையில் தீரன் சின்னமலையின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மோகன் காந்தி, தமிழரசன், பிரபாகரன், பாலு, தங்கராசு உள்ளிட்ட நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment