Sunday, 2 August 2015

சொல்லி சொல்லி பார்த்தனர் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலை அருகே மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில் வை.கோ வின் கலிங்கப்பட்டியில் அடித்து நொறுக்கியது போல கரூரில் மதுபானக்கடையை அடித்து முயன்ற பொதுமக்களால் பரபரப்பு – போலீஸ் துணையுடன் பொதுமக்களே இழுத்து மூடினர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது வெங்கக்கல் பட்டி கிராமம், இப்பகுதியானது நிலகிரி மாவட்டம், கூடலூர் டூ நாகப்பட்டினம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையும், கரூர் டூ திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையும் இணையும் இடத்திலேயே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடையை மாற்றக்கோரி பல்வேறு தரப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அரசு ஆட்சித்துறை மற்றும் கலால் துறை வருமானம் பற்றியே யோசித்தது. இந்நிலையில் கலிங்கப்பட்டி பிரச்சினையை கண்ட அப்பகுதி மக்கள் அதே பாணியில் டாஸ்மாக்கை நொறுக்க முற்பட்டனர். பின்னர் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏராளமான பெண்கள் கைக்குழந்தையுடன் அங்கே அந்த டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எல்லை மீறி டாஸ்மாக்கிற்குள் புகுந்த முயன்ற மக்கள் ஒரு புறம் டாஸ்மாக்கை இழுத்து மூட முற்பட்ட மக்கள் ஒரு புறம் என இருக்க டாஸ்மாக்கிற்கு பாதுகாப்பு கொடுக்க குவிந்த போலீஸ் ஒரு புறம் என இருக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை மூலம் அந்த மதுபானக்கடையை இழுத்து மூடினர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. ஒரு புறம் இது சவலாக இருந்ததை சாதித்தது என்ற ஆர்வம் அப்பகுதி மக்களிடையே இருந்த போது, இதே போன்று காந்தியவாதி சசிப்பெருமாள் மரணத்திற்கு முன் அப்பகுதி மக்கள் இப்படி முழித்து இருந்தால் ஒரு உயிர் பிரிந்திருக்காது.

பேட்டி : பாதிக்கப்பட்ட மக்கள்

No comments:

Post a Comment