Saturday 1 August 2015

கலாம் இறுதிச்சடங்கால் நாடே துக்கம் அனுசரித்த வேளையில் கோல்ஃப் விளையாடிய முதலமைச்சர்


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நடந்த அதே வேளையில், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், கோல்ஃப் மற்றும் ஸ்னூக்கர் விளையாடிக் கொண்டிருந்ததும், நடனமாடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வடகிழக்கு மாநிலமான மெகாலாயாவில்கடந்த 27ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த (30ஆம் தேதி) அப்துல் கலாமின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அப்துல் கலாமுக்கு இறுதிச் சடங்கு நடந்த இன்றைய தினம் நாடே துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த அதே வேளையில் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், கோல்ஃப் மற்றும் ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.அசாம் முதல்வர் தருண் கோகாய் ஹெலிகாப்டர் மூலம் நாகோன் மைதானத்திற்கு சென்று கோல்ஃப், ஸ்னூக்கர் விளையாடும் காட்சிகளை .என்.. செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பாதுகாவலர்கள் சுற்றி இருக்க, மைதானத்தில் அவர் கோல்ஃப் மற்றும் ஸ்னூக்கர் விளையாடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடும் காட்சியும் வெளியாகியுள்ளது.அப்துல் கலாமின் மறைவால் நாடே துக்கத்தில் இருக்கும் சமயத்தில் அஸ்ஸாம் முதல்வரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment