Tuesday 11 August 2015

கரூருக்கு வருகை தந்த பத்ம ஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியாருக்கு கரூர் திருக்குறள் பேரவை, கவிஞர்கள் எழுத்தாளர்கள் சார்பில் மேள வாத்திய இசை முழுக்கத்தோடு வரவேற்பு வழங்கப்பட்டது

கரூர் நாரதகான சபாவின் 71 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நல்லி குழுமங்களின் தலைவரும், இலக்கிய காவலருமான பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் கரூர் வந்தார். இதையடுத்து கரூர் திருக்குறள் பேரவை, தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், நூல் எழுத்தாளர்கள், நூல் படைப்பாளர்கள் சார்பில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட மைய நூலகம் அருகில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மேள தாளங்கள் முழங்க அவரை கவி பாடி, தமிழ் பாடி புரவலர்கள் மற்றும் புலவர்கள் சந்தன மாலை மற்றும்  நூல் ஆடைகளை அணித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புரவலரும், தொழில் சாதனையாளர் விருது பெற்ற பி.டி.கோச் தங்கராசு, குளித்தலை தமிழ் பேரவை தலைவர் கடவூர் மணிமாறன், பொது சமய சன்மார்க்க சங்கத்தலைவர் சுப.லெட்சுமணன், லயன்ஸ் கிளப் மாவட்டத்தலைவர் பிஎன்.ஆனந்தநாராயணன், லயன் அறிவுடை நம்பி, புலவர் குழந்தை, நஞ்சை புகளூர் அழகரசன், கவிஞர் சரவணன், கரூர் தமிழிசைச் சங்க தலைவர் க.ப.பாலசுப்பிரமணியன், கரூர் சஷ்டிக் குழு தலைவர் ஆனிலை பாலமுருகன், ராணி சீதை மஹால் வி.ஆர்.இராமையா, திராவிடர் கழகம் க.ந.சதாசிவம், சின்ன அண்ணாமலை பேரன் கரு.மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக கரூர் தொழில் சாதனையாளர் விருது பெற்ற பி.டி.கோச் தங்கராசுவையும், கரூர் அரிமா சங்க நிர்வாகி பிஎன்.அனந்தநாராயணனையும் பத்ம ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.




No comments:

Post a Comment