Tuesday 11 August 2015

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு வை.கோ வாழ்த்து

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை வை.கோ மனதார வாழ்த்து
சென்னையில் பிறந்து படித்து வளர்ந்த இளைஞர் சுந்தர் பிச்சை, கூகிள் நிறுவனத்தின் உலகத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்ற செய்தி அறிந்து மகிழ்கிறேன். கரக்பூர் ஐஐடியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி கற்றவர். கூகுள் நிறுவனத்தில் புதிது புதிதாக இவர் நிகழ்த்திய சாதனைகளின் அடிப்படையில், இன்று இந்தப் பொறுப்பை அடைந்து இருக்கின்றார்.
தமிழகத்தில் தற்போது 550 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அமைந்து இருக்கின்றன. உலகத்திலேயே அதிக அளவாக 1,30,000 சதுர கிலோ மீட்டர்கள் நிலப்பரப்பிற்குள் இத்தனைப் பொறியியல் கல்லூரிகள் அமைந்து இருப்பது தமிழகத்தில்தான் என்கிறபோது கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பெருமை நிலைநாட்டப்பட்டு இருக்கின்றது. அக்கல்லூரிகளின் வழியாக ஆண்டுதோறும் உருவாகின்ற இலட்சத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள், எதிர்காலத்தில் உலகம் முழுமையும் பரவிப் பணியாற்றக் கூடிய வாய்ப்புகளைப் பெறுவதற்கு, சுந்தர் பிச்சையின் வெற்றி ஒரு பெரும் உந்துதலாக அமையும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்பத் தமிழகத்து இளைஞர்கள் தங்கள் தேடுதலை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுந்தர் பிச்சை மேலும் பல சாதனைச் சிகரங்களை எட்டுவதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment