அ.தி.மு.க வின்
வன்முறை தேவையற்றது – ஈழத்தமிழர்கள் பல லட்சம் நபர்கள் குன்று குவித்த போது அ.தி.மு.க
வினர் இந்த மாதிரியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் நானே மேடை போட்டு அ.தி.மு.க
பொதுச் செயலாளரை பாராட்டி இருப்பேன் – கரூர் அருகே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ
பேட்டி
கரூர் அருகே தென்னிலை
பகுதியின் அருகே உள்ள பெரிய திருமங்கலத்தில் ம.தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் மாநில
அளவிலான 8 வது தொண்டரணி பயிற்சி முகாம் கடந்த 16 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை நடைபெற்று
வருவதையடுத்து இப்பயிற்சி முகாமை முடித்து வைக்க வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர்
வை.கோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய போது., அப்போது அவர் பேசியதாவது., இலங்கையில்
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ராஜபக்ஷே
பிரதமர் ஆவது தோற்கடிக்கப்பட்டது என்பது
மட்டுமே மன ஆறுதல் வந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்ஷே
இருந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றார்.
ஈழத்து சொந்தங்களை கொன்று குவித்த போது ஏன் அ.தி.மு.க வினர் ஒரு ஆர்பாட்டம் கூட நடத்த
வில்லை. கண்டன குரல் கூட கொடுக்க வில்லை. தற்போது
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ரணில் வந்தாலும், ராஜபக்ஷே வந்தாலும் தமிழர்களுக்கும் ஒன்றும்
நடக்க போவதில்லை. சிறிசேனா வந்த பிறகும், தமிழர்களுக்கான அதிகார பகிர்வுகள் எதுவும்
செய்து கொடுக்க வில்லை, கிழக்கு பகுதியில் ஒரு சதவிகிதம் இருந்த சிங்களர்கள் இன்று
36 சதவிகிதம் அங்கு இருக்கிறார்கள். சிங்களர்கள் அங்கு குடியமர்த்தியிருக்கிறார்கள்.
தமிழர்களின் தாயகப்பகுதி சிங்களரின் குடியேற்றமாக மாறிவிட்டது. தெருக்கள் தோறும் சிங்கள
இராணுவம் உள்ளது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது
வட கிழக்கு மாகாணங்களில் எந்த ஒரு மதுபானக்கடையோ, பாலியல் வன்முறையும் நடந்ததில்லை.
ஆனால் தற்போது மதுபானக்கடைகள் அதிகரித்ததோடு, பாலியல் வன்முறைகளும் அங்கு அரங்கேறி
வருகின்றன என்றார். மேலும் சிங்கள இராணுவம் அங்கு இருந்து வெளியேற்றப்பட வேண்டும்,
சிங்கள குடியிருப்புகள் வெளியேற்றப்பட வேண்டும் என்றார். அது போல உள்நாட்டு விசாரணை
கூடாது. உலகளவில் தமிழக ஈழத்தை பற்றியும், ஈழத்தமிழர்களின் கஷ்டங்களை வெளிக்கொணரும்
வகையில் தமிழக இளைஞர்கள் மாணவர்கள் முன் வந்து
உலகளவில் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்றார். மேலும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என்றார். மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டுமென கூறினார். மேலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதற்கு தமிழகம்
முழுவதும் அ.தி.மு.க வினர் வன்முறையில்
ஈடுபட்டுள்ளனர்- அவர்
மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அதை விட்டு விட்டு, தொடர்ந்து கண்டனம்
மற்றும் கொடும்பாவி எரிப்பு சம்பவங்களை அவரை (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை) கொல்லுவதற்கு
சமமான வேலையாகும், ஆனால் காவிரி ஆற்றின்
குறுக்கே
இரு
அணைகள்
கட்டுவது உறுதி
என கூறிய மத்திய
சட்டத்
துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியதற்கு எந்த
ஒரு ஆர்பாட்டத்தில் கூட அ.தி.மு.க
வினர்
ஈடுபடாதது
ஏன்
என
அதிமுக
விற்கு கேள்வி எழுப்பினார். இதை
திருப்பூர் மாநாடு தல்வரையே கேட்கிறேன், சதானந்தா கவுடா இந்த மாதிரி சொன்னதற்கு ஒரு
கண்டனம் தெரிவித்து ஒரு ஆர்பாட்டம் நடத்தி இருந்தால் நான் தெருவிலேயே மேடை போட்டு பாராட்டி
இருப்பேன். ஆனால் இவ்வளவு பெரிய அழிவு நடந்து வருகிறது. அதை தடுக்க அ.தி.மு.க வினர்
முன் வரவில்லை. ஏன் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் மதியம் 2 மணி முதல் 4 மணி
வரை பெண்களுக்கான பார் ஒன்று செயல்படுகிறதாம். இது தான் அரசின் சாதனையா ? மாணவர்களே,
இளைஞர்களே வீதிக்கு வாருங்கள் மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் நடத்த வாருங்கள் என்றார்.
அரசியலால் மதுக்கடைகளை ஒழிக்க முடியாது. என்றார். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு
ஒரு வேண்டுகோள் வன்முறை வேண்டாம் என்றார். வரும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் 15 ம்
தேதி திருப்பூரில் நடைபெற உள்ள ம.தி.மு.க மாநாடு அரசியல் வரலாற்றையே திருப்பி பார்க்க
வைக்கும் என்றார். மேலும் வைர எழுத்துக்களால் இந்த மாநாடு அமையும் இம்மாநாடு ஈழத்தமிழர்களின்
பிரச்சினையை பற்றியே அமையும் என்றார். இம்மாநாடு திராவிட அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும்,
பொன் எழுத்துக்கள் அல்லாது வைர எழுத்துக்களால் பொறுத்திருப்பது போல அமையும் என்றார்.
பேட்டியின் போது ஈரோடு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, கரூர் மாவட்ட செயலாளர் பரணி.கே.மணி,
குளித்தலை நகர்மன்ற தலைவர் பல்லவி இராஜா, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன்,
கரூர் நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், தாந்தோன்றி நகர செயலாளர் சத்தியமூர்த்தி, க.பரமத்தி இளைஞரணி செயலாளர் அன்பரசன் புயல்
உள்ளிட்டோர் இருந்தனர்.
No comments:
Post a Comment