''கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எந்த வித பயனில்லாத நிர்வாகத்தையும்,ஊழல் -லஞ்சம்,அதிகாரத் தோரணையையும் மட்டுமே செலுத்தி இந்த மண்ணில் ஜனநாயகத்தையே கேலிகூத்தாக்கி வந்த அதிமுகவும்,அதன் தலைமையும் 2016 தேர்தலை மட்டுமே முன்னிறுத்தி
மக்களைத் திசை திருப்ப தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ்இளங்கோவன் அவர்களின் ஒரு கருத்துக்கு எதிராக ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்கள்-சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் போராடச் செய்து மிகுந்த அநாகரிகமான கோசங்களையும்,செயல்களையும்
செய்து வருவது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும் என உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர்
பொங்கலூர் மணிகண்டன் கடும் கண்டன தெரிவித்துள்ளார். மேலும் அவர்
தெரிவித்துள்ளதாவது., காவல்துறையின் துணையோடு ஆளும் கட்சியான அ.தி.மு.க தொண்டர்கள் என்ற அந்தஸ்தில் ஆளும் கட்சித் தொண்டர்கள் இளங்கோவன் அவர்களின் இல்லங்களை
முற்றுகை இடுவதும்,மிகவும் தரம் கெட்ட வகையில் நடந்து கொள்வதும் தமிழ்நாட்டு அரசியலின் அருவெருக்கத் தக்க சம்பவங்களாகும்,
குறிப்பாக பாஜகவும் அதிமுகவும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இரு கட்சியினரும் மத்திய-மாநில ஆட்சி பொறுப்பை கையில் வைத்துக் கொண்டு இளங்கோவன் அவர்களை மிரட்டிப் பணிய வைக்க முயல்வது ஜனநாயகம் அல்ல.சர்வாதிகாரம்.
அதிமுகவில் இப்போது இருக்கும் நாஞ்சில் சம்பத்,பருதி இளம் வழுதி
போன்றவர்களும் இன்னும் பலரும் செல்வி.ஜெயலலிதா பற்றி மிகவும் கேவலமாகப் பேசியதும்,திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து
அதிமுகவினர் மிகக் கேவலமாகப் பேசியதும், ஜெயலலிதா குறித்து திமுகவினர் மிகக் கேவலமாகப் பேசியதும் தமிழ்நாட்டு மண்ணில் 1989 முதல் இன்று வரை தரம் கெட்ட முன்னுதாரணங்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து ஜெயலலிதாவே மிகவும் கேவலமாக பேட்டி அளித்தும் அறிக்கை வெளியிட்டும்,மேடையில் பேசியும் வந்த அருவருக்கத் தக்க வரலாற்றுச் சிறப்புகள் இந்த மண்ணுக்கு உண்டு.
ஆனால் இப்போது ஈரோட்டுக்குள் இளங்கோவனை நுழைய விட மாட்டோம் என்றும்,அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வெளிப்படையாக காவல் துறையின் முன்னிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசின் ஆதரவோடு போராட்டம் நடத்த அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகும்,
தமிழ்நாடும்,அரசு நிருவாகமும் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானதல்ல.
ஒட்டு மொத்த மக்களின் உரிமைக்கு பாத்தியமானதாகும்.
ஒரு கட்சியை அரசு நிருவாகமே அனுமதிப்பதும்,இன்னொரு கட்சியை மிரட்ட நினைப்பதும் ஜனநாயகப் படுகொலையாகும்..
திரு.இளங்கோவன் இன்று சென்னையில் அளித்த பேட்டிக்கு திட்ட மிட்டு அதிமுகவின் ஜெயா தொலைகாட்சியின் செய்தியாளரை அனுப்பி
பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஜெயா டிவி யின் செயலும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.
கலைஞர் டிவி செய்தியாளர் ஒருவர் ஜெயலலிதாவை தன் இஷ்டத்துக்கு கேள்வி கேட்க அனுமதிப்பார்களா?
இளங்கோவனுக்கு ஒரு நியாயம்? ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயமா?
நேற்று வரை அதிமுகவுக்கு எதிராக போராடி கடும் குற்றம் சாட்டி வந்த பாஜக தமிழிசை உள்ளிட்ட அனைவரும் 2016 தேர்தல் கூட்டணிக்கு பணிந்து செல்வதன் மூலம் அரசியல் சாக்கடையின் அப்பட்டம் வெளிப்படையாக தெரியாது.
மொத்தத்தில் ஊடகம் என்ற பெயரில், ஆளும் கட்சி என்ற பெயரில்
பெரிய கட்சி என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவமும்,அடக்கு முறையும் அதிமுகவை விட்டு இன்னும் போக வில்லை.
1996 அதிமுக அடைந்த படுதோல்வியின் போது செல்வி,ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நாட்களில் அதிமுகவினர் ஒருவரும் மூச்சுக் கூட விட வில்லை.காரணம் அப்போது திமுக ஆட்சி நடந்தது.
ஆக ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஆட்டம் போடுவதும்,ஆட்சியில் இல்லாத போது அடங்கி ஒடுங்குவதும் அதிமுக வின் பாணி.
மொத்தத்தில் இந்த மண்ணில் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
மக்கள் மாறுவதும், திருந்துவதும் எப்போது?,
இந்த அநாகரிகச் செயலை செய்யும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது எதிர்கால தலைமுறையின் கடமையாகும்.
ஈவிகேஸ் இளங்கோவன் மீதான அடக்கு முறையை அனைவரும் கண்டிக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்ட செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
அதிமுகவின் வன்முறை வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.
அதிமுக-பாஜக கட்சிகளின் அநாகரிகச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு,,எக்காரணம் கொண்டு இளங்கோவன் மன்னிப்புக் கேட்கக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் உழவர் உழைப்பாளர் சங்கத்தலைவர்
பொங்கலூர் இரா.மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment