Thursday 13 August 2015

மது விலக்கு கோரி எந்த வித ஆடம்பர மில்லாமல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் - உண்ணாவிரதத்தை முடித்த இஸ்லாமிய பெண்ணின் குழந்தை

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தற்போது ஒரே குறிக்கோளாக மதுவிலக்கிற்காக போராடி வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சரியாக மாலை 05.14 மணி வரை உண்ணாவிரதம் இருந்த அக்கட்சியினர் எந்த வித ஆடம்பர மில்லாமல் அமைதியாக உண்ணாவிரதத்தை முடித்தனர்.
முழு மதுவிலக்கு கோரி தேமுதிக சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள "உண்ணாவிரத அறப்போராட்டம்" நடைபெற்றது.
தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும், தொண்டர்கள் பலரும் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், "மதுவால் கணவனை இழந்த மனைவியும், மகனை இழந்த பெற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் என பல குடும்பங்கள் கஷ்டபடுகின்றன என்றும் சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் மட்டும் மது அருந்தும் பழக்கத்தால், கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு, சுமார் 65 ஆயிரம்பேர் உயிருக்குபோராடும் நிலையிலும், கடந்த பத்தாண்டுகளில் குடிப்பழக்கத்தால் மட்டும் சுமார் இரண்டு லட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழகத்தில் மதுவை அறவே ஒழிக்கவேண்டும், அதற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கொள்கையாகும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக அரசு உடனடியாக துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒருநாள் அடையாள "உண்ணாவிரத அறப்போராட்டம்" நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரதம் எவ்வித ஆடம்பர மில்லாமல் நடைபெற்றது. ஒரு புறம் இருக்க இந்த கேப்டன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர்  தமிழிசை சௌந்தர்ராஜன், புதிய  தமிழகம்  கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி  உண்ணாவிரதத்திற்கு  ஆதரவு  தெரிவித்தனர்.! முன்னதாக  நேற்று முன் தினம்  கேப்டன்  விஜயகாந்த்  தமிழக  கவர்னரை  சந்தித்து  சட்ட மன்றத்தை  உடனடியாக  கூட்ட  நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தினார். ! வரும்  24  ஆம் தேதி  சட்டமன்றம்  கூடுகிறது  என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனுக்கு  இனி  எல்லாமே  வெற்றிதான்  என்கின்றனர். தே.மு.தி.க வினர் எது எப்படியோ மது ஒழிந்து இளைஞர்களை நல்ல படியாக கொண்டு வர அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாடு பட்டால் மது வில்லாத தமிழகமாக மாறும் என்பது ஐயமில்லை. உண்ணாவிரத முடிவில்  இஸ்லாமிய பெண்ணின்  குழந்தை  கேப்டனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது.

No comments:

Post a Comment