ஆடி அமாவாசையன்று தங்களது முன்னோர்கள் நினைவாக புண்ணிய தலங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை (14ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம், மாயனூர், நெரூர், வாங்கல், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இதற்காக திண்டுக்கல், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளாவின் பல பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் கூடுவார்கள். அவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் காவிரி ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் கோயில் மற்றும் அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள்.
ஆடி அமாவாசையையொட்டி கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் 14-08-15 அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், பலிபூஜை, நிவேத்திய பூஜை, தீபாராதனை, உஷபூஜை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு படை வீரர்களும், காவல் துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment