Wednesday, 19 August 2015

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதற்கு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்- ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டுவது உறுதி என கூறிய மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியதற்கு எந்த ஒரு ஆர்பாட்டத்தில் கூட அ.தி.மு.க வினர் ஈடுபடாதது ஏன் ? கரூரில் வை.கோ கேள்வி

கரூர் அருகே தென்னிலை பகுதியில் பெரிய திருமங்கலம் பகுதியில் கடந்த 4 நாட்களாக .தி.மு. தொண்டரணி பயிற்சி முகாம் மாநில அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முடித்துப் வைக்க வருகை தந்த .தி.மு. பொதுச்செயலாளர் வை.கோ செய்தியாளர்களை சந்தித்தார்.,அப்போது அவர் பேசியதாவது., இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ராஜபக்ஷே பிரதமர் ஆவது தோற்கடிக்கப்பட்டது என்பது மட்டுமே மன ஆறுதல் வந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்ஷே இருந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றார். மேலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உலகளவில் கருத்தரங்கு நடந்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், என்றார். மேலும் .வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதற்கு தமிழகம் முழுவதும் .தி.மு. வினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்- ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டுவது உறுதி என கூறிய மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியதற்கு எந்த ஒரு ஆர்பாட்டத்தில் கூட .தி.மு. வினர் ஈடுபடாதது ஏன் என அதிமுகவிற்கு கேள்வி எழுப்பினார். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மதுவை ஒழிக்க வீதியில் வந்து போராட வேண்டும். இது அரசியலால் முடியாது என்றார். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி நடைபெறும் மாநாடு திராவிட அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தும், பொன் எழுத்துக்கள் அல்லாது வைர எழுத்துக்களால் பொறுத்திருப்பது போல அமையும் என்றார். பேட்டியின் போது ஈரோடு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, கரூர் மாவட்ட செயலாளர் பரணி.கே.மணி, குளித்தலை நகர்மன்ற தலைவர் பல்லவி இராஜா, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், கரூர் நகர செயலாளர் என்.பி.கே.பாலமுருகன், தாந்தோன்றி நகர செயலாளர் சத்தியமூர்த்தி, க.பரமத்தி இளைஞரணி செயலாளர் அன்பரசன் புயல் உள்ளிட்டோர் இருந்தனர்.

No comments:

Post a Comment