Wednesday, 19 August 2015

42 வது தேசிய சப் ஜீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவி சாம்பியன் பட்டம்

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா மாவட்ட கேரம் கழகத்தின் சார்பில் ஜஸ்நகரா பப்ளிக் பள்ளியில் 42 வது தேசிய சப் - ஜீனயர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 12ந் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக பங்கு கொண்ட பரணிபார்க் பள்ளி மாணவி M.மோகனாம்பிகை தமிழகத்திற்கும், கரூர் மாவட்டத்திற்கும், பரணிபார்க் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

                தேசிய அளவில் தங்கம் வென்று தமிழத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவி M.மோகனாம்பிகைக்கு பரணிபார்க் பள்ளி வளாகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கரூர் மாட்ட கேரம் கழகத்தின் தலைவரும், பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளருமான S.மோகனரெங்கன் தலைமை வகித்தார்பரணி பார்க் கல்விக்குழுமத்தின் செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், கரூர் மாட்ட கேரம் கழகத்தின் செயலாளரும், பள்ளியின் நிர்வாக அலுவலருமான M.சுரேஷ், பரணிபார்க் பள்ளியின் முதல்வர் K.சேகர், கேரம் பயிற்சியாளர் பிரவீன் குமார்,உடற்கல்வி ஆசிரிர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.



புகைப்படம்தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவி M.மோகனாம்பிகைகரூர் மாட்ட கேரம் கழகத்தின் தலைவரும்பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளருமான S.மோகனரெங்கன்பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்கரூர் மாட்ட கேரம் கழகத்தின் செயலாளரும்பள்ளியின் நிர்வாக அலுவலருமான M.சுரேஷ்கேரம் பயிற்சியாளர் பிரவீன் குமார்.

No comments:

Post a Comment