Monday, 17 August 2015

“திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிற சக்திகள் பல முனைகளில் முனைந்து நிற்கின்றன. இவை அனைத்தையும் முறியடிக்கின்ற விதத்தில் இந்த மாநாடு அமையும் - திருப்பூர் மாநாட்டு திடலை பார்வையிட்டு வை.கோ பேட்டி

ம.தி.மு.க திருப்பூர் மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டார் வைகோ
மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில், திராவிட இயக்க நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா 107ஆவது பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15 இல் திருப்பூரில் நடைபெறுகிறது.
இன்று (17-09-15) காலை நடைபயிற்சி சென்ற வைகோ அவர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு பந்தல் சிவா அவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
பின்பு இன்று காலை 10 மணி அளவில் மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற பொதுச்செயலாளர் வைகோ மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிற சக்திகள் பல முனைகளில் முனைந்து நிற்கின்றன. இவை அனைத்தையும் முறியடிக்கின்ற விதத்தில் இந்த மாநாடு அமையும்.
திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டைப் போன்று இங்கு மக்கள் கடல் கூட இருக்கிறது. இயக்கத்தில் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அரசியல் தட்பவெட்ப நிலை அதற்கு சாதகமாக இருக்கிறது. ஏனெனில் இந்த மாநாட்டுக்குப் பின்னர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே இந்த மாநாட்டு முடிவு திராவிட இயக்கத்தை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இருக்கும்.
தமிழ்நாட்டு அரசியலில் எத்தகைய மாற்றம் வேண்டும் என்று நடுநிலையாளர்களும், நல்லவர்களும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ, அத்தகைய மாற்றத்துக்கான நுழைவாயிலாக இம்மாநாடு அமையும்என்று குறிப்பிட்டார்.
உடன் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் குகன்மில் செந்தில், இளைஞரணி மாநிலச் செயலாளர் வே.ஈசுவரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சி.கிஷ்ணன், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், முத்துரத்தினம், சிவபாலன், நாகராஜன், மின்னல் முகமது அலி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்



No comments:

Post a Comment