நாடெங்கிலும் மக்கள் ஆர்வத்துடனும் அமைதியாகவும் வாக்களித்துள்ளனர். எந்த வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது வாக்களிப்பு மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை காலி மாவட்டத்தில் 70 வீத வாக்குப்பதிவும் நுவரெலியா மாவட்டத்தில் 70 வீத வாக்குப்பதிவும் பொலநறுவை மாவட்டத்தில் 75 வீத வாக்குப்பதிவும் புத்தளம் மாவட்டத்தில் 66.5 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் 65 வீத வாக்குப்பதிவும் கேகாலையில் 75 வீத வாக்குப்பதிவும் அநுராதபுர மாவட்டத்தில் 70 வீத வாக்களிப்பும் திருகோணமலை மாவட்டத்தில் 75 வீத வாக்களிப்பும் அம்பாறையில் 65 வீத வாக்குப்பதிவும் கண்டி மாவட்டத்தில் 70 வீத வாக்குப்பதிவும் கம்பஹா மாவட்டத்தில் 70 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளது.
தற்போது வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள், வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டுகான பாராளுமன்றத் தேர்தலுக்காக 35 அரசியல் கட்சிகளிலிருந்தும் 200 சுயேச்சை குழுக்களிலிருந்தும் மொத்தமாக 6,151 வேட்பாளர்கள், 196பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர்.
இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் 12,314
வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன் இவற்றுள், வட மாகாணத்திலுள்ள 7 சிறுதீவுகளும் உள்ளடங்குகின்றன.
தேர்தல்கள் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம்
15,440,491 பேர் இம்முறை வாக்களிப்புக்கு தகுதிபெற்றிருந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 70,549
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் 4,825 விசேட அதிரடிப்படையினரும் 7,000 சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுவை இரவு 11 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment