பீகாரில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அம்மாநில முதலமச்சர் நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளது.
ஆனால், பீகாரில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அம்மாநில பாஜகவும், பிரதமர் மோடியும் களத்தில் குதித்துள்னர். அதன் விளைவாக, பீகார் மாநிலத்திற்கு ரூ. 1.25 லட்சம் கோடி நிதிஉதவி வழங்கப்படும் என்று மோடி தற்போது அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பொது மக்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான வாக்குறுதியை அளித்துள்ளார். அதில், பீகார் தேர்தலில் நான் மீண்டும் முதல்வரானால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த நிலையில், பீகாரில், இதே வாக்குறுதியை அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment