Wednesday, 19 August 2015

சென்னை அடையாறில் ராமச்சந்திர ஆதித்தனார் சாலை பெயர்ப்பலகை: முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றிய பா. இராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்பது தம் விருப்பம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். 


மேலும், மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன், தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு, அன்னாரது பெயரை சூட்டிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலையை "பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகர மேயருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து “பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை" என புதிதாக பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர்ப்பலகையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment