கரூர் மாவட்டம் , மாயனூர்
புதுக்கட்டளை
வாய்க்காலில்
தமிழ்நாடு
முதலமைச்சர் ஜெயலலிதாவின்
உத்திரவுப்படி காவேரி ஆற்றிலிருந்து
விவசாயிகளின் பயன்பாட்டிற்கு
நடப்பாண்டிற்கு
பாசனத்திற்கு
தண்ணீர்
திறந்து
விட உத்தரவிட்டு அதனடிப் படையில் மாவட்ட
ஆட்சித் தலைவர் ச.ஜெயந்தி காவேரி
ஆற்றில்
புதிய
கட்டளை
வாய்க்காலில்
இருந்து
தண்ணீர்
திறந்து
விட்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு
முதலமைச்சர்
ஜெயலலிதாவின் ஆணைப்படி நடப்பாண்டிற்கு
விவசாய
பணிக்கு
தண்ணீர்
திறந்து
விடப் பட்டுள்ளது. இதன் மூலம் கரூர்,
திருச்சி
மற்றும்
தஞ்சாவூர்
ஆகிய
மாவட்டங்களில்
உள்ள
20,622 ஏக்கர்
நிலங்கள்
பாசன
வசதி
பெறுகின்றன.
எனவே
அப்பகுதிகளில்
உள்ள
விவசாயிகள்
மிக
சிறந்த
முறையில்
விவசாய
பணிகளை
மேற்கொண்டு
பயன்
பட்டு கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்
தலைவர் ஜெயந்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அ.பாப்பாசுந்தரம் , மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், காவேரி பாதுகாப்பு கோட்ட செயற் பொறியாளர் திருவேட்டை
செல்வம், உதவிப் பொறியாளர் சதீஸ் குமார், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முத்துசாமி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment