ஏற்கனவே கல்வித் தகுதி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்போது 'எழுத்துப் பிழை' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்... டெல்லி பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஸ்மிருதி இராணி அனுப்பியுள்ள கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகள்தான் இப்போது பேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பொதுநல ஆர்வலர்கள் மற்றும் மொழி பற்று உள்ளவர்களிடம் ஹாட் டாக டாபிக் ஓடிக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வில் நல்லதொரு தேர்ச்சி பெற்றதற்காக டெல்லி பள்ளி ஒன்றுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பெயரில் பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கடிதத்தில் மந்திரியின் பெயரே இந்தியில் எழுத்துப்பிழையுடன் உள்ளது. அத்துடன் ‘மினிஸ்டர்’ என்ற ஆங்கில வார்த்தையிலும், ‘சன்சதன்’ என்ற இந்தி வார்த்தையிலும் எழுத்துப்பிழை இருக்கிறது.
இந்த கடிதத்தை பெற்ற அந்த பள்ளியை சேர்ந்த ரிச்சா குமார் என்ற ஆசிரியை, அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ஒரு குறிப்புடன் வெளியிட்டார். அதில் அவர் மந்திரியின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்ததுடன், கடிதத்தில் இருந்த எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி இருந்தார். அத்துடன், “குறைந்தபட்சம் உங்களுக்காக வேலை செய்கிறவர்கள், அமைச்சகத்தில் உள்ளவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்” என கூறி இருந்தார்.
இது தொடர்பாக உடனடியாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்தன. அவை கல்வித்துறையை கவனிக்கும் மந்திரியின் கடிதத்திலேயே பிழைகளா என சிரிக்க வைத்தன.
இதை அறிந்த மந்திரி ஸ்மிரிதி இரானி அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், தனது பெயரில் அனுப்பிய கடிதத்தில் எழுத்துப்பிழைகள் இருப்பது குறித்து சி.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்டிருப்பதாக நிருபர்களிடம் கூறினார்.
சி.பி.எஸ்.இ. தேர்வில் நல்லதொரு தேர்ச்சி பெறுகிற பள்ளிகளுக்கு, மந்திரியின் பெயரில் சி.பி.எஸ்.இ. பாராட்டு கடிதம் அனுப்புவது வழக்கம். அப்படி ஸ்மிரிதி இரானியின் பெயரால் அனுப்பிய கடிதத்தில்தான் எழுத்துப்பிழைகள் இருந்து, அது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பிழைகள் இருப்பதால் சி.பி.எஸ்.இ விளக்கம் கேட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினை சமூக வளைதளங்கில் மிகுந்த ஹாட் டாபிக்காக உலா வருகிறது. எது எப்படியோ ஸ்மிருதி இராணிக்கு என்ன வேலையோ ? என்ன காலமோ ? பார்ப்போம்
No comments:
Post a Comment