தமிழக தேர்தல் அதிகாரிகளும் ஆளும் அதிமுகவினரும் செய்து வரும் குளறுபடிகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதியை நிலைநாட்ட செய்யும் நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகி
ற 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, தமிழகத்தில் அமைந்துள்ள 64,094 வாக்குச்சாவடிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின் படி, திமுக 64,094 வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது.
ற 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, தமிழகத்தில் அமைந்துள்ள 64,094 வாக்குச்சாவடிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின் படி, திமுக 64,094 வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது.
திமுக தொண்டர்கள் தத்தமது பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதுடன், ஆளும் அதிமுக ஆட்சியின் கைப்பாவையாகச் செயல்படும் தமிழக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, உயிரோடு இருப்பவர்கள் பல்லாயிரக் கணக்கானோரை, இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட நடைபெற்ற முயற்சிகளை முறியடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, தேர்தல் விதிகளுக்கு புறம்பாக தமிழக தேர்தல் அதிகாரிகளும் ஆளும் அதிமுக வினரும் செய்து வரும் குளறுபடிகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை நிலைநாட்டிட செய்யும் நடவடிக்கைகளையும் திமுக மேற்கொண்டு வருகிறது.
தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டத்திற்கு ஒரு வக்கீல் வீதம், அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்தில், திமுக வக்கீல்களுடன், நிர்வாகிகளோடும் இணைந்து ஆளுங்கட்சியினர் துணையோடு அரசு அதிகாரிகள் செய்து வரும் தில்லுமுல்லுகளை ஆராய்ந்து, அது குறித்த அறிக்கைகளை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
பல தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருந்தாலும், இப்பொழுது நம் எதிரிகள் ஜனநாயக விரோதச்செயல்களில் ஈடுபட்டாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகின்ற இந்தச் சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு ஒற்றுமையோடும் முழு ஈடுபாட்டோடும் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்
No comments:
Post a Comment