Thursday 13 August 2015

கள்ளக்காதலியை கொன்று மனைவிக்கு தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்த கள்ளக்காதலன் சேலம் அருகே பரபரப்பு

ஓமலூர் அருகே கள்ளக்காதலி கொன்று 2 நாட்களாக மனைவி, குழந்தைகளுக்கு தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகம் சின்னேரிகாடு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 18–ந்தேதி 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு பின்பு செல்போன் டவரில் அதே நாளில் அந்த பகுதியில் யார் –யார் வந்தார்கள் என்று விசாரித்து ஓமலூரை அடுத்த கே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த காவேரி மகன் தங்கராஜ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவலை கூறினார். அவர் கூறியதாவது: வெள்ளாளப்பட்டி வட்டக்காடு பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன் என்பவரது மனைவி உமா (28) என்பவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தினமும் சேலத்திற்கு பேருந்தில் செல்லும் போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தோம். இந்த நிலையில் எங்கள் விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து சண்டை போட்டதால் உமா சேலம் அழகாபுரம்புதூர் பகுதியில் தற்போது குடியிருந்து வந்தார். 

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். கடந்த ஜூன் 26-ந்தேதி காலையில் எனது மனைவி அருகே உள்ள கார்மெண்ட்சுக்கு வேலைக்கு சென்ற பின்பு குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். அதன் பின் உமாவை சேலம் சென்று எனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து கொண்டு எனது வீட்டிற்கு வந்து விட்டு விட்டு கொல்லப்பட்டியில் உள்ள மது கடைக்கு சென்று மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டிற்கு சென்ற பின்பு மது குடித்து விட்டு வந்து விட்டாயா என்று என்னிடம் சண்டை போட்டாள். 

இதனால் எங்கள் இருவருக்கும் மீண்டும் சண்டை வந்தது. சரி வா உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என்று அழைத்த போது நான் வர மாட்டேன் என்றும், என்னை நீ திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். மேலும் உனது மனைவி வரும் வரை நான் வீட்டை விட்டு போக மாட்டேன் என்றும் கூறியதால் கன்னத்தில் ஓங்கி அரைந்த போது மயங்கி கீழே விழுந்து விட்டாள். நான் வெளியே வந்து சிகரெட் பிடித்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது இறந்து கிடந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அருகிலேயே உட்கார்ந்து இருந்தேன். 

மாலை நான்கு மணி ஆனதால் எனது மனைவியும் குழந்தைகளும் வந்து விடுவார்கள் என்று பயந்து சாக்கு பையில் அவளை உள்ளே போட்டு மூட்டை கட்டி கட்டிலின் அடியில் தள்ளி விட்டு எப்போதும் போல் இருந்தேன். கட்டிலின் அடியில் இருந்ததால் எனது மனைவியும் குழந்தைகளும் பார்க்கவில்லை இரவு சமைத்து குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டு எனது மனைவி மற்றும் குழந்தைகள் படுத்துவிட்டனர். எனக்கு தூக்கம் வரவில்லை. விடிய விடிய விழித்துக்கொண்டிருந்தேன். 

மீண்டும் காலையில் எழுந்து மனைவி வேலைக்கும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பின்பு கட்டிலின் அடியில் இருந்து பிணத்தை எடுத்து எனது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வைத்து கயிற்றால் கட்டி டேனிஷ்பேட்டை சின்னேரிகாடு வனப்பகுதிக்கு சென்றேன். அப்போது ரோட்டில் இருந்து வனப்பகுதிக்கு மூட்டையை எடுத்து கொண்டு வைத்து கையில் வைத்திருந்த பெட்ரோலை சாக்கு பையில் ஊற்றி தீ பற்ற வைத்து விட்டு மீண்டும் எனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment