Wednesday, 12 August 2015

கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - கரூர் திருக்குறள் பேரவை பாராட்டு

வரும், செப்டம்பர், 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் மத்திய அரசின் சார்பில், நடக்கும் விழாவில், நாடு முழுவதும் இருந்து, சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில் கரூர் சேரன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வர் வி.பழநியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனியப்பன், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர். மனைவி ஜோதிமணி. மகன் நவீன்ராஜ், திருச்சி ஜோசப் கல்லூரியிலும், மகள் நந்தினி, கோவையில் உள்ள கல்லூரியிலும் படிக்கின்றனர். இவர் கடந்த, 1964ம் ஆண்டு ஏப்ரல், 14ம் தேதி பிறந்தார். வாங்கல் அரசு பள்ளியில் பள்ளி படிப்பு, கரூர் அரசு கலைக்கல்லூரியில், பி.., புவியியல் மற்றும் மதுரை காமராஜ் பல்கலையில், எம்.எஸ்.ஸி., மற்றும் எம்.பில்., அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.எட்., படித்துள்ளார். கடந்த, 1988ம் ஆண்டில் சேரன் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து, தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கடந்த, 2011ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அவர், தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, பழனியப்பன் கூறியதாவது: கடந்த, 1988ம் ஆண்டில், சேரன் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன். தொடர்ந்து, 1994ம் ஆண்டு பள்ளி முதல்வராக பொறுப்பேற்றேன். சேரன் பள்ளி, 1997-98ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எங்கள் பள்ளி மாநில அளவில், மாவட்ட அளவிலும் சிறப்பான இடங்களை பெற்று வருகிறது. சிறந்த சேவை காரணமாக, கடந்த, 2011 ல், மாநில அளவிலான நல்லாசிரியர் விருது கிடைத்தது. மாநில நல்லாசிரியர் விருது கிடைத்து, இரண்டு ஆண்டு கழித்த பின், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடந்தாண்டு தேசிய விருதுக்கு விண்ணப்பித்தேன். தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, முறையான கடிதம் கிடைக்கவில்லை. விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. கல்லூரி பேராசிரியராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்த பின், இதன் மீது ஏற்றபட்ட பற்றால், தொடர்ந்து பணியில் ஈடுபடுகிறேன். கடந்த, 2002ல் அரசு பள்ளி ஆசிரியருக்காக தேர்வு செய்யப்பட்டேன். கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில், பள்ளியில் சேர ஆணை கிடைத்தது. அந்த வேலை வேண்டாமென்று, மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்து ஈடுபடுகிறேன். இதனை தொடர்ந்து கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், சேரன் பள்ளி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன் மாணவ, மாணவிகளுக்காக இன்றும் அயராது பாடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கல்வி மட்டுமின்றி ஒழுக்கத்திலும், பல்வேறு திறமைகளை வளர்ப்பதிலும், தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இந்த செயல் பாராட்டுக்குரியது. கரூர் திருக்குறள் பேரவை சார்பாக நாங்கள் அவரை மனதார பாராட்டுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment