Wednesday 12 August 2015

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வேலை நிறுத்தம் - மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. 
 ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று, காங்கிரஸ், இடது சாரிகள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.
 
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இருந்தது. 
 
இதனையடுத்து, ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், பல இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். உருவ பொம்மை எரித்தனர். இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 


No comments:

Post a Comment