கரூர் பழைய திண்டுக்கல்
சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடை, அருகே கோயில் இருப்பதாகவும், மேலும் பொதுமக்களுக்கு
இடையூறாக இருப்பதாகவும், கடையை மூட சொல்லி பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் காந்தியவாதி
சசிபெருமாள் இறப்பிற்கு நியாயம் கேட்டு ம.தி.மு.க, கம்யூனீஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்
உள்ளிட்ட கட்சிகள் இன்று தமிழகம் முழுவது டாஸ்மாக்கை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கரூரில் அந்த டாஸ்மாக் கடை முன்பு தமிழ் உணர்வாளர்கள், திருக்குறள் பேரவை,
கரூர் தமிழிசைச் சங்கம், அரிமா சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், கரூர்
திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் மகாத்மா காந்தியடிகளின் வழி
அமைதி போராட்டத்தினை ஆர்பாட்டமாக டாஸ்மாக் கடை முன்பு முழக்க மிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் தமிழ் உணர்வாளர்கள் எல்லாம்
டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதை பாராட்டியதோடு, எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாபெரும் உண்ணாவிரத்தில் கலந்து கொள்ளப்
போவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறிச்சென்றனர்.
பேட்டி : மேலை.பழநியப்பன்
– திருக்குறள் பேரவை செயலாளர் - கரூர்
No comments:
Post a Comment