Tuesday 4 August 2015

எப்பவுமே வித்யாசமாக யோசிக்கும் அரவக்குறிச்சி கலையரசன் – இப்படியும் ஒரு போராட்டம் – தங்கள் பணத்தை கொண்டு வாங்கிய சரக்குகளை தரையில் ஊற்றி நூதன போராட்டம் – கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.க செயலாளர் கோ.கலையரசன், இவர் மது விலக்கிற்காக வை.கோ மாரத்தான் நடத்திய போது, மதுவிற்கு எதிராக கட்டுரை போட்டியை மாணவ, மாணவிகளிடம் நடத்தி வை.கோ வின் ஆதரவையும் பெற்றதோடு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில்  தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக தங்களது ம.தி.மு.க பல்வேறு போராட்டங்களை பல வகையில் தெரிவித்து வரும் நிலையில் அரவக்குறிச்சி பகுதிகளில் அரசு நடத்தும் மதுபானக் கடைகளால் தங்கள் குடும்பம் பாதிக்கும் என்றும் பச்சக்குழந்தைகளுக்கு மதுவை ஊற்றி வேடிக்கை பார்க்கிறார்கள் அரசே இதை வேடிக்கை பார்க்கிறது என்றும், எனவே நமது வருங்கால சந்ததியினர் காத்து நமது வாழ்க்கைக்கு கேள்வியாக விளங்கும் இந்த மது நமக்கு வேண்டாம் என விளக்கி 100 விழுக்காடு அப்பகுதி மக்களை கடையடைப்பு செய்ததோடு, அங்கே இருந்த மது பானக்கடைகளில் இருந்த மது வகைகளை, தங்களிடம் இருந்த சுமார் ரூ 18 ஆயிரத்து 600 ரூபாய்க்கு மேல் மதுபானங்களை வாங்கி நடு ரோட்டில் கொட்டிய சம்பவம் மற்ற போராட்டங்களில் இருந்து வித்யாசமாகவே இருந்தது. மேலும் தமிழக அளவில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடையடைப்பு நடத்திய பெருமை இவரையே சாரும்
 

No comments:

Post a Comment