Friday, 21 August 2015

இந்திய அணியை ஹாக்கி போட்டியில் வழிநடத்தி செல்ல தகுதியானவர் கேப்டன் ராணி ராம்பால் – ஜஸ்பிரீத் கவுர்

புதுடெல்லி: விரைவில் நடைபெற உள்ள 7-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. டெல்லி மேஜர் தியான்சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய வீராங்கனைகள் அண்மையில் நடந்து முடிந்த வால்வோ சர்வதேச ஹாக்கி போட்டியில் 3-வது இடத்தை பிடித்திருந்தனர். இந்நிலையில், பெனால்டி கார்னர் ஏரியா மற்றும் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருகின்றனர் இந்திய வீராங்கனைகள்.
இந்நிலையில், வால்வோ போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற இந்திய ஹாக்கி வீராங்கனை ஜஸ்பிரீத் கவுர் பயிற்சி பற்றி கூறியவை பின்வருமாறு:-
நமது அணி வால்வோ போட்டியில் அபாரமாக விளையாடியிருந்தது. அந்த போட்டியிலிருந்து பல விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். நாங்கள் கேப்டன் ராணி ராம்பாலின் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். அவர் நல்ல தலைமை பண்புகளை கொண்டவர். பீல்டில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் எங்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினார். அவருடன் விளையாடியது ஒவ்வொருவருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அவரது அபாரமான திறமை எதிரணியினரையும் மெய்சிலிர்க்க செய்தது.
இவ்வாறு ஜஸ்பிரீத் கவுர் கூறினார்.

7-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியானது 2017 ஜூனியர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பாகும். இந்த போட்டி வரும் செப்டம்பர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சீனாவின் செங்சோவில் நடைபெறுகிறது. இதில் 9 ஆசிய ஜூனியர் அணிகள் பங்கேற்கின்றன.

No comments:

Post a Comment