Monday, 5 October 2015

கரூர் அருகே தொடரும் டெங்கு காய்ச்சல் – ஒரு சிறுமி பலியானதை தொடர்ந்தும் மெத்தனம் காட்டும் சுகாதாரத்துறை – மேலும் 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியால் அவதி – கரூர் மருத்துவமனைக்கு சென்றால் எங்களிடம் போதிய வசதி இல்லை என மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு



கரூர் அருகே நெரூர் தென்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் கடந்தி சில தினங்களுக்கு முன்னர் 4 ம் வகுப்பு மாணவி தர்ஷினி என்ற மாணவி (வயது 10) டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இந்நிலையில் இது வைரல் காய்ச்சல் என கூறி சுகாதார துறையினர் இந்த செய்தியை மூடி மறைத்தனர். பின்னர் இதே நிலையில் அங்கு டெங்கு காய்ச்சல் பரவி சுமார் 3 க்கும் மேற்பட்டோர் இருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் சுகாதரத்துறையினருக்கு தெரிவிக்க அவர்களை கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாது என மெத்தனம் காட்டி திருச்சி, சேலம், மதுரை என பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியை சார்ந்த சைலஜா (வயது 10), 4 ம் வகுப்பு மாணவி, அனுதர்ஷினி 2 ம் வகுப்பு மாணவி, 7 மாத கைக்குழந்தை சக்திவேலு, 1 ½ வயது கைக்குழந்தை கவிதர்ஷினி, பாப்பாயி மூதாட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது ஆனால் அங்கு எந்த விதமான வசதி இல்லை எனவும் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில் ஏழை, எளிய மக்களாகிய அவர்கள் எங்கே செல்வது என கரூர் மாவட்ட மருத்துவமனையில் குடியேறும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமர மக்களிடம் பாகுபாடு பார்க்கும் சுகாதார துறை, மருத்துவமனை நிர்வாகம் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரிடமும், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment