Saturday, 3 October 2015

மங்குனி அமைச்சர் எனபதை மணிகொருமுறை நிருபித்து கொண்டிருக்கிறீரய்யா ! வடிவேலு பட காமெடி போல கூகுள் டொமைனை வெறும் 12 அமெரிக்க டாலருக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி



மங்குனி அமைச்சர் எனபதை மணிகொருமுறை நிருபித்து கொண்டிருக்கிறீரய்யா ! வடிவேலு பட காமெடி போல கூகுள் டொமைனை வெறும் 12 அமெரிக்க டாலருக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலியை பற்றி பார்ப்போம்
கூகுள் புதிதாக தொடங்கியுள்ள டொமைன் பெயர் வாங்கிக் கொள்ளும் சேவையில், உலகின் மிகப்பிரபலமான கூகுளின் டொமைன் பெயர் விற்பனைக்கு தயார் என அறிவிப்பு வந்திருந்தது. 

இதையடுத்து, சன்மே அஷ்வின் வெட் என்கிற கூகுளின் முன்னாள் பணியாளரான இந்தியர், 'அதை வாங்க முடிகிறாதா? என்றுதான் பார்ப்போமே..' என ஆர்வமாக முயற்சித்திருக்கிறார். இந்த முயற்சியில், தனது கடன் அட்டை(கிரெடிட் கார்ட்) மூலம் பன்னிரெண்டே டாலர் செலவில், கூகுள் பெயரை தனது உடமையாக்கிக் கொண்டார்.

இந்த விற்பனையை உறுதி செய்யும் மெயிலும் அவருக்கு வந்து சேர்ந்தது. எனினும், உடனடியாக வந்த மெயில், இது விற்கப்படமாட்டது என அறிவித்தது. இச்சம்பவத்தை கூகுளின் பாதுகாப்பு பிரிவுக்கு உடனடியாக தெரிவித்து, இந்த பிரச்சனையை சீரமைக்குமாறு சன்மே தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே 2003-ம் ஆண்டு மைக்ரோசாப்டின் ஹாட்மெயிலுக்கும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அது தனது டொமைன் பெயரின் உரிமத்தினை புதுப்பிக்க தவறியதால் ஒரு தனிநபர் எதேச்சையாக அதை தனதுடமையாக்கிக் கொண்டார். எனினும், நிலைமையைப் புரிந்துகொண்டு அதை மீண்டும் அந்நிறுவனத்துக்கே அவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment