திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கி 24–ந்தேதி வரை நடந்தது.
பிரமோற்சவம் முடிந்த பின்பும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் தான் அதிகம் பேர் வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த நிலையில் திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. 22–ந்தேதி வரை விழா நடக்கிறது.
விழாவையொட்டி தினமும் காலை மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி மாட வீதியில் உலாவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
14–ந்தேதி மாலை பெரிய சேஷ வாகனத்திலும், 15–ந்தேதி காலை சின்ன சேஷ வாகனம், மாலை அன்ன வாகனத்திலும், 16–ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும் மாலை முத்து பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது.
17–ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை சர்வ பூமாலை வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார்.
18–ந்தேதி காலை மோகினி அலங்கார சேவையும், இரவு கருட சேவையும் நடக்கிறது.
19–ந்தேதி காலை அனுமந்த வாகன சேவையும், மாலை கஜ வாகன சேவையும் 20–ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவையும், இரவு சந்திர பிரமை சேவையும் நடக்கிறது.
21–ந்தேதி காலை தங்க தேரோட்டமும், இரவு குதிரை வாகன சேவையும் நடக்கிறது.
22–ந்தேதி சக்கரஸ்னாத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி கட்டண சேவைகள், வி.ஐ.பி. இலவச தரிச சேவையும், முதியோர், ஊனமுற்றோருக்கான சிறப்பு தரிசன சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் விடுதி அறை முன்பதிவு ரத்து செய்யப்படுவதாகவும் தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிங் ராவ் கூறினார்.
No comments:
Post a Comment