பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
நடப்பு பருவத்திற்கான நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாதாரண நெல்லுக்கு குவிண்ட்டாலுக்கு 1460 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 1520 ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த விலை போதுமானதல்ல.
உழவர் பெருமக்களின் வாழ்வு வளம் பெற பல்வேறு நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டு வருவதாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறி வரும் ஜெயலலிதா, உண்மையில் அப்படி எதையும் செய்யவில்லை. சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.60 உயர்த்தி ரூ.1,410 ஆகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1450 ஆகவும் அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. அத்துடன், வழக்கமான தமிழக அரசின் ஊக்கத்தொகையான சன்னரக நெல்லுக்கு ரூ.70, சாதாரண நெல்லுக்கு ரூ.50 சேர்த்து வழங்கியுள்ளார். உழவர்களின் நலனுக்காக ஜெயலலிதா எதையும் செய்யவில்லை. இன்னும் கேட்டால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதல் விலை நியாயமான அளவுக்கு உயர்த்தப்படும் என 2011 தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. இப்போது அறிவிக்கப்பட்டிருப்பது தான் நியாயமான விலையா? என்பதை ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு, உர விலை உயர்வு, ஆள்கூலி அதிகரிப்பு என பல்வேறு இடையூறுகளைக் கடந்து நெல் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் மீளா கடன் சுமையில் சிக்க நேரிடும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.1424 செலவு ஆவதாக மதிப்பிடப்பட்டிருந்தது. லாபமே இல்லாமல் கிட்டத்தட்ட உற்பத்தி செலவை கொள்முதல் விலையாக அறிவிப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்பது தான் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். அதன்படி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,200 கொள்முதல் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

No comments:
Post a Comment