Friday, 2 October 2015

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: நாமக்கல் மண்டலத்தில் சுமார் 2.20 கோடி முட்டைகள் தேக்கம்



சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.
இதனால் நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.  எனவே மத்திய, மாநில அரசுகள் போராட்டம் நடத்தி வரும் லாரி உரிமையாளர்களின் சங்க நிர்வாகிகளை  அழைத்து பேசி சுமூக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து 2 நாட்களுக்கு தங்களது முட்டை லாரி வாகனங்களை இயக்கப்படாது என அறிவித்திருந்தது.
இந்நிலையில் முதல் நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. 2 வது நாள் போராட்டத்திற்கு பிறகு, நாளை முதல் வழக்கம் போல் முட்டைகள் அனுப்பும் பணி தொடரும் என்று கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment