Friday, 2 October 2015

கரூரில் தேசப்பிதா சிறப்பு நூலானது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருக்குறள் பேரவை வெளியிட்டது


அண்ணல் காந்தியடிகளின் 147 வது பிறந்த நாளான இன்று (அக் 02) நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் அண்ணல் காந்தியடிகள் சிறப்பிதழாக  “தேசப்பிதா” என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நூல் வெளியிட்டு விழாவில் சிறப்பித்தனர். மேலும் இந்த நூலை கரூர் டெக்ஸ்டைல் சிட்டி லயன் சங்க மாவட்டதலைவர் எஸ்.கே.டி.எம்.கருப்புசாமி வெளியிட கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் முருகேஷன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கரூர் அரிமா மண்டலத்தலைவர் சூர்யா வே.கதிரவன், லயன் அறிவுடைநம்பி, லயன் ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தலைவர் இன்ஜினியர் ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா, கரூர் ஹேண்ட் லூம் டெக்ஸ்டைல் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் முதல் துணைத்தலைவர் சிவக்குமார், கரூர் லியோ சங்க மண்டலத் தலைவர் அங்குராஜ் தலைமையில் கரூர் அரசு கலைக்கல்லூரி, கொங்கு கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, லியோ மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment