குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள நெசவாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னி மோசடி ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வடிவில் கிட்னி மோசடி நடப்பது தெரியவந்துள்ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு கிட்னி விற்க முன்வருபவர்களை போலி ஆவணங்கள் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து சென்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பெராந்தார்காடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தங்கமணி(41). இருவரும் விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, குமாரபாளையம் காந்திபுரத்தை சேர்ந்த பிரேமா என்ற கிட்னி புரோக்கர், தங்கமணியை சந்தித்தார்.
அப்போது இலங்கையில் உள்ள ஒருவருக்கு கிட்னியை தானமாக கொடுத்தால், 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். அங்கு செல்ல பாஸ்போர்ட், விசா, மருத்துவ பரிசோதனை என ரூ.50 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு, மீதம் ரூ.2.50 லட்சம் கிடைக்கும் என கூறினார். தங்களது வறுமைக்கு ஒரு விடிவு பிறக்குமென கருதிய தங்கமணி, இலங்கை செல்ல ஒப்புக்கொண்டார். சென்னையை சேர்ந்த புரோக்கர் சங்கர் மூலம் தங்கமணிக்கு பா ஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்கனவே தங்கமணியின் ஒரு கிட்னி பாதிப்படைந்துள்ளதால், தானம் கொடுத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென மருத்துவர் எச்சரித்தார். இதனால் இலங்கை செல்லும் திட்டத்தை தங்கமணி கைவிட்டார்.
கடந்த 15 நாட்களுக்கு முன், தங்கமணியை தொடர்பு கொண்ட பிரேமா, இலங்கை செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டதாகவும், அங்கு கிட்னி தானம் செய்ய தயாராக இருக்கும்படியும் தெரிவித்தார். அப்போது, கிட்னி தானம் கொடுத்தால், தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென டாக்டர் தெரிவித்ததால், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக சேகர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பிரேமா, இலங்கையில் சமையல் வேலைக்கு செல்வதாக கூறி பாஸ்போர்ட், மருத்துவ பரிசோதனை போன்றவற்றுக்காக ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். உடனடியாக இலங்கை செல்லவேண்டும். இல்லாவிட்டால் அதற்கான செலவு ரூ.40 ஆயிரத்தை திருப்பி தரவேண்டும் என தங்கமணியை போனில் மிரட்டினார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் பிரேமாவிடம் விசாரித்தனர். மேலும், வழக்குப்பதிந்து பிரேமா, தங்கமணியை பிரேமாவுக்கு அறிமுகப்படுத்திய சுந்தரம் காலனி ஈஸ்வரி ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான சென்னையைச் சேர்ந்த புரோக்கர் சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment