மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடித்த யுயூ டு உட்பட மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு இன்று அறிவித்துள்ளது.
யானைக் கால் நோய்களை உருவாக்கும் உருளைப்புழுக்களுக்கு எதிராக அவெர்மெக்டின் என்ற மருந்து கண்டுபிடித்தற்காக வில்லியம் சி. கேம்பெல், சடோஷி ஒமுரா ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அர்டிமிசினின் எனப்படும் மலேரியா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த யுயூ டு என்ற விஞ்ஞானியோடு மருத்துவத்துக்கான நோபல் பரிசை இவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், மனிதர்களின் உடல்நலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பல ஆயிரக்கணக்கான உயிர்பலியைக் குறைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment