Friday, 2 October 2015

கரூர் அருகே முதியவரை மிரட்டி நிலத்தை அபகரித்த 4 பேர் கொண்ட கும்பலை நில அபகரிப்பு தடுப்பு மற்றும் மீட்பு போலீஸார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவு


கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், இடையப்பட்டி மேற்கு பகுதியில் உள்ள வளையப்பட்டி பகுதியை சார்ந்தவர் கருணகிரி (வயது 70), இவர் தனது மகன்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம், கோட்டைக்கரை பகுதியில் உள்ளது. அங்கு தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான  3 ¾ ஏக்கர் நிலத்தில்,   அப்பகுதியின் அருகே விவசாயம் செய்து வரும் தங்கவேல், சின்னசாமி, முருகேஷன், முருகானந்தம் ஆகியோர் அடிக்கடி கருணகிரியின் 75 செண்ட்  நிலத்தை தங்களுக்கு கொடுக்குமாறு பலத்த ஆயுதங்களுடன் கொண்டு மிரட்டியதுடன் அந்த நிலத்தில் திடீரென கடந்த ஜூலை மாதம் 21 ம் தேதி கருணகிரியின் வயலில் பயிரிட்டிருந்த கத்திரி சாகுபடியை ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு அழித்து அடிமட்டமாக நிரவியதோடு, அங்கேயே குடிசைப் போட்டு பைப் லைன் எடுத்துள்ளனர். இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த கருணகிரி மற்றும் அவரது மகன்கள் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு மற்றும் மீட்பு பிரிவு போலீஸீல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு பிரிவு போலீஸார் கருணகிரி நிலத்தை அபகரித்த குற்றத்திற்காகவும், அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முருகன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நில அபகரிப்பு சம்பந்தமாக கரூரை சார்ந்த இரு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நில அபகரிப்பு சம்பந்தமாக மேலும் நான்கு விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment