Friday, 2 October 2015

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்த தொழில் துறை அமைச்சர் கரூரில் செய்தியாளர்களை கண்டு ஓட்டம் பரபரப்பு






 கரூரில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்ததையடுத்து நாடகமாடும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் – யாருடைய போதைக்கோ ஊறுகாயான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் – தொடர்கதையாகும் கரூர் தெரு கூத்தால் அவல நிலை
கரூர் நகராட்சி கூட்டத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்த ஆளுகின்ற அ.தி.மு.க கவுன்சிலர்களை நேரில் அழைத்து அமைச்சர் இரகசிய விசாரணை நடத்தியதால் பரபரப்பு

கரூர் நகராட்சி கூட்டம் கடந்த 30 ம் தேதி புதன் கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு ஆளும் அ.தி.மு.க கட்சியை சார்ந்த 37 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும் தங்கள் வார்டு மேம்பாட்டிற்காகவும் குரல் எழுப்பி வெளி நடப்பு செய்யும் எதிர் கட்சி கவுன்சிலர்கள் மட்டும் அன்று சரியாக கூட்டத்திற்கு வருகை தந்தனர். ம.தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கவுன்சிலர்கள் 11 பேர் மட்டுமே வந்திருந்ததோடு, கரூர் நகராட்சி தலைவர் அ.தி.மு.க வை சார்ந்த செல்வராஜ் கூட்ட அரங்கிற்குள் அமர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் 37 பேரும் கூட்டத்தை புறக்கணித்ததை கண்டு திடுக்கிட்டார். ஆனால் எதிர்கட்சி கவுன்சிலர்கள் சரியாக வந்திருந்தனர். இதனால் கூட்டம் போதிய கோரம் இல்லாததால் கூட்டத்தை ஓத்தி வைப்பதாக அறிவித்து கூட்டமன்றத்தை விட்டு அவசரமாக வெளியேறினார். இச்சம்பவம் அ.தி.மு.க தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், தமிழக போக்குவரத்து துறை, தொழில் துறை அமைச்சருமான தங்கமணி தலைமையில் கரூர் சுற்றுலா மையத்தில் இன்று கரூர் நகராட்சியின்  அனைத்து அ.தி.மு.க கவுன்சிலர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினார். இந்த இரகசிய கூட்ட விசாரணையில் கவுன்சிலர்கள் தங்கள் மனக்குறைகளை காரசாரமாக எடுத்துக் கூறினர். இதனால் கட்சியின் அ.தி.மு.க வினர் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது. இந்த இரகசிய கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ மற்றும் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த இரகசிய கூட்டத்திற்கு பிறகு  மாவட்ட வருவாய் அருணா, அமைச்சரை சந்தித்து பேசினார். மேலும் இந்த இரகசிய கூட்ட நிகழ்வை படம், வீடியோ எடுக்க பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்தே கூட்டம் நடந்தது ஏன். என்றும், அப்படியென்றால் காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் பதில் சொல்லாமல் அட இது கட்சி கூட்டமுங்க என கூறி புறமுதுகிட்டு ஓடியது ஏன் என்றும் புரியாத புதிராக உள்ளது.

No comments:

Post a Comment