ம.தி.மு.க., மாநகராட்சி அமைப்புகள், அரசு வரையறுத்துள்ள உள்ளாட்சி எல்லையைக் கொண்டு செயல்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள், அரசு சார்பில் வரையறுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின்படி, வட்டக் கழகங்களை உள்ளடக்கி மாநகராட்சி அமைப்புகள் செயல்படும்.
மாநகராட்சி எல்லை
மாநகராட்சிகள் கீழ்குறிப்பிட்டுள்ள வட்டக் கழகங்களை உள்ளடக்கி இயங்கும். இதன்படி, மாநகராட்சிகளான சென்னை- 200, மதுரை- 100, கோவை- 100, திருச்சி- 65, திருநெல்வேலி- 55, சேலம்- 60, ஈரோடு- 60, திருப்பூர்- 60, தூத்துக்குடி- 60, வேலூர்- 60, தஞ்சாவூர்- 62, திண்டுக்கல்- 51 என்ற அடிப்படையில் வட்டங்களை கொண்டு செயல்படும்.
கட்சியின் நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சி மட்டும் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று ஏற்கனவே இயங்குவது போன்று தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
குளித்தலை நகர
ம.தி.மு.க. நிர்வாகிகள்
ம.தி.மு.க. நிர்வாகிகள்
கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ம.தி.மு.க., குளித்தலை நகர பொறுப்பாளராக எம்.ஆர்.டி.ரவிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்புக்குழு உறுப்பினர்களாக ரகுபதி, திருப்பதி, செய்யூர் பாலு, முத்துக்குமார், கணபதி, சின்னப்பன், பூண்டீ பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment