இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, அதனை தொடர்ந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு ஆகிய இரு வழ்க்குகள் தமிழக காவல் துறை வரலாற்றிலியே ஒரு மாபெரும் மாற்றத்தை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அங்கு அவர் சரணடைந்த விவகாரத்தில் ஒரு நாள் முழுவதும் விசாரணைக்கு ஒத்துழைத்தார் எனவும், ஆனால் அங்கு அந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடந்து கொண்ட விதம் சரியில்லாத காரணத்தினால் இந்த சங்ககிரி பகுதியை சார்ந்த 21 வயதான அருண் என்ற இரண்டாம் குற்றவாளி என கருதப்படும் இவர் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற எண் 1 ன் நீதிபதி பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்ககிரியை சார்ந்த அருண் என்பவரை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க உத்திரவிட்டார். பின்பு நாளை நாமக்கல் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
Tuesday, 13 October 2015
கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபர் அருண் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் நீதிபதி உத்திரவு
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, அதனை தொடர்ந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு ஆகிய இரு வழ்க்குகள் தமிழக காவல் துறை வரலாற்றிலியே ஒரு மாபெரும் மாற்றத்தை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அங்கு அவர் சரணடைந்த விவகாரத்தில் ஒரு நாள் முழுவதும் விசாரணைக்கு ஒத்துழைத்தார் எனவும், ஆனால் அங்கு அந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடந்து கொண்ட விதம் சரியில்லாத காரணத்தினால் இந்த சங்ககிரி பகுதியை சார்ந்த 21 வயதான அருண் என்ற இரண்டாம் குற்றவாளி என கருதப்படும் இவர் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1 ல் சரணடைந்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற எண் 1 ன் நீதிபதி பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்ககிரியை சார்ந்த அருண் என்பவரை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க உத்திரவிட்டார். பின்பு நாளை நாமக்கல் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment