இன்ஜினியரிங் கல்லூரி
மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, அதனை தொடர்ந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா
தற்கொலை வழக்கு என நாடு முழுவதும் உள்ள போலீஸாரிடம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்
அனைத்து கட்சியினரும் தமிழக போலீஸாரிடம் நம்பிக்கை இல்லை எனவும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க
கோரி பல்வேறு கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்ட காரணத்தினால்
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த இரு வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க
உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் கொலை வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில்
சரணடைந்தார். இதனை தொடர்ந்து அங்கு அவர் சரணடைந்த விவகாரத்தில் ஒரு நாள் முழுவதும்
விசாரணைக்கு ஒத்துழைத்தார் எனவும், ஆனால் அங்கு அந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நடந்து
கொண்ட விதம் சரியில்லாத காரணத்தினால் இந்த சங்ககிரி பகுதியை சார்ந்த 21 வயதான அருண்
என்ற இரண்டாம் குற்றவாளி என கருதப்படும் இவர் கரூர் நீதிமன்றம் ஜெ.எம் 1 ல் சரணடைந்தார்
என இவரது வழக்கறிஞர் பழ.ஆனந்த் தெரிவித்தார். மேலும் அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
4 பேர் என்றார்கள், பிறகு 7 பேர் என்றார்கள், தற்போது 25 பேர் என்கின்றார்கள். ஆகவே
முறையான நீதி விசாரணை வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். யுவராஜை தொடர்ந்து கோகுல்ராஜ்
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டாம் குற்றவாளியான அருண் என்ற 21 வயதான வாலிபர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த விவகாரம்
இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி : பழ.ஆனந்த்
– வழக்கறிஞர் - கரூர்
No comments:
Post a Comment