கரூர் மாவட்ட அ.தி.மு.க
செயலாளராக பணியாற்றிய செந்தில் பாலாஜி, பல்வேறு காரணங்களால் அவரது அ.தி.மு.க மாவட்ட
செயலாளர் பதவி பறிக்கபட்டு பின்பு அவரது துறையான போக்குவரத்து துறை அமைச்சர் பதவியையும்
முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பறித்தார். பின்பு அ.இ.அ.தி.மு.க
வில் கரூர் மாவட்ட ஜெ பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் மற்றும்
இளம்பெண்கள் பாசறை ஆகியவன பிற அணிகளின் ஆதரவுடன் தாந்தோன்றி ஒன்றிய செயலாளரும், தாந்தோன்றி
ஒன்றிய குழு உறுப்பினருமான விஜயபாஸ்கர் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை கட்சியின்
பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொடுத்தார். பின்பு இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து
மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தையடுத்து ஒரே நாளில் ஆங்காங்கே உள்ள எம்.ஜி.ஆர். அண்ணா
சிலைகளுக்கு மாலையிட்டு மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் அறிமுகம்
செய்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் கரூர் அருகே உள்ள
வெங்கமேடு அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆனால் மாவட்ட செயலாளர் அண்ணன் விஜய பாஸ்கர் என்று எல்லா தொண்டர்களும் சத்தம் போட அய்யய்யோ,
நான் ஒரு எளிய கட்சியின் சாதாரண தொண்டன் என விளக்கம் கொடுத்து எல்லா மூத்த நிர்வாகிகளையும்
அழைத்து பிறகே மாலையிட்டார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது,
கரூர் நகர துணைத்தலைவரும், கரூர் மாவட்ட துணை செயலாளருமான காளியப்பன், கோல்டு ஸ்பாட்
இராஜா, தானேஷ் (எ) முத்துக்குமார், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், மாவட்ட
பொருளாளர் பி.கே.எஸ்.முரளி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
கட்சியின் அடிப்படை தொண்டர்கள் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் காலில் விழுந்து
ஆசிர்வாதம் பெற்றார் புதிய மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர், மேலும் இவர் ஜெயலலிதாவிற்காகவே
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரெயின்போ பாஸ்கர் என்கின்ற பெயரை விஜயபாஸ்கர் என்று
மாற்றிக் கொண்டார் என்பதும் இவர்தான் தாந்தோன்றி ஒன்றிய குழு தலைவர் பதவி இவருக்கு
கொடுக்கப்பட்டு முன்னாள் மாஜி செந்தில் பாலாஜியால் பின்னர் பறிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது கூட
மாவட்ட செயலாளர் என்கின்ற வார்த்தைக்கு பதில் கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே
தொண்டர்கள் சார்பில் வைக்கபட்டுள்ள பிளக்ஸ் போர்டில் கட்சியின் எளிய தொண்டனாகிய என்னை
கரூர் மாவட்ட செயலாளர் பதவி வகிக்க வைத்த தாயே என்கின்ற வார்த்தை கரூர் நகருக்கு பஸ்ஸில்
சென்று வரும் பலரையும் இதயத்தையும், கண்களையும் கவர்ந்துள்ளது. எது எப்படியோ கரூர்
மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment