Tuesday, 6 October 2015

கோகுல்ராஜ் கொலை வழக்கில் எனது கணவர் சரணடைய வாய்ப்பு - யுவராஜ் மனைவி




கோகுல்ராஜ் கொலை வழக்கில் தனது கணவர் (யுவராஜ்) சரண் அடைய வாய்ப்பு இருக்கிறது என்று யுவராஜின் மனைவி சுவீதா செய்தியாளர்களிடம் கூறினார்.

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர்,  செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள். இவர்களை வரவேற்க்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.மேலும் இவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவீதா வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இவர்களை வரவேற்க்க சுவீதா ஆத்தூர் வந்திருந்தார். அப்பொழுது, அவர் 3 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்க முயன்ற போது சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது, என்றும் உடனடியாக சிறை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாலை அணிவிக்காமல் அவர்களை யுவராஜின் மனைவி சுவீதா அழைத்துச் சென்றார். அப்பொழுது, யுவராஜின் மனைவி சுவீதா செய்தியாளருக்கு பேட்டியளித்தார்
அவர்  கூறுகையில்:

பொறியாளர் கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். இவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் எனது கணவர் விரைவில் சரண் அடைவார்.மேலும் தனது கணவர் சில நாட்களில் (யுவராஜ்) சரண் அடைய வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment