உத்திர பிரதேச
மாநிலம், தாத்ரி நகரில் வசித்த முஹம்மத் அஹ்லாத் என்பவரை மாட்டு இறைச்சி சாப்பிட்டார்
என்பதற்காக செங்கலால் அடித்து சங்பரிவார பயங்கரவாதிகள்
கொன்றனர். இச்சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கரூரில்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர்
அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்று இந்திய
அரசிற்கும், உத்திர பிரதேச மாநிலத்தையும் கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பட்டன.
இந்த கோர படுகொலையை செய்தவர்கள் கடுமையான தண்டனைப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட
வேண்டும். மேலும் உரிய நீதி வழங்க வேண்டுமென முழுக்கங்கள் எழுப்பபட்டன. மேலும் இதில்
பேசிய மாநில நிர்வாகி சுல்தான் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசிய போது., உத்திரபிரதேச
மாநிலத்தில் தாத்ரி நகரில் வசித்த முஹம்மது அஹ்லாத் என்பவரது மகன் நாட்டை காக்கும்
இராணுவ படையில் விமானப்படையில் பணிபுரிந்து நாட்டைக் காக்கிறார். ஆனால் நாட்டை காக்கும்
இராணுவ வீரரின் வீட்டைக் காக்க அரசு மறந்து விட்டது. அவரது வீட்டையும், அவரையும், அவரது
மகன்களையும், மனைவிகளையும் செங்கலால் தாக்கி உயிரிழந்துள்ளார். அதற்கு நாட்டை காக்கும்
மோடி அரசு தவறியுள்ளதாகவும், இதற்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் நாங்கள் அரசின் சலுகைகளையும்,
அரசு நிதிகள் மற்றும் உதவிகளை புறக்கணிப்பதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும்
விதத்தில் நடந்து கொள்ள உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய பெருமக்களும், ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு
தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கரூர் மாவட்ட தலைவர் முஹம்மது
ஹனிபா தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் சுல்தான் இப்ராஹிம் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட துணை தலைவர் கமாலுதின், செயலாளர் முஹம்மது ஹஸன், பொருளாளர் இர்ஷாத், துணை செயலாளர்
ரமலான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment