Friday, 9 October 2015

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கரூர் திருக்குறள் பேரவை சார்பில் தபால் வழங்குனருக்கு (போஸ்ட் மேன்) பாராட்டு


உலக அஞ்சல் தினத்தையொட்டி கரூர் திருக்குறள் பேரவை சார்பில் அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் சீனிவாசபுரத்தில் பணியாற்றி வரும் கலைமணி என்ற (போஸ்ட் மேன்) தபால் வழங்குநருக்கு பொன்னாடை அணிவித்து கரூர் திருக்குறள் பேரவை சார்பாக கொளரவிக்கப்பட்டது. பின்னர் கரூர் திருக்குறள் பேரவை சார்பில் நினைவு பரிசினையும் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் வழங்கினார். மேலும் நலம், நலமறிய ஆவா என்று சுமார் 1950 ல் வந்த அஞ்சல் கடிதம் தற்போது நாகரீகம் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ், பேஸ்புக், வாட்ஸ் அப் என்ற குறுஞ்செய்தி மூலம் சுருகி விட்டதையும் சுட்டிக் காட்டினார். மேலும் அப்படியே வந்து விட்டாலும் அவர்களது பணியை சிறப்பாக செய்யும் அவர்களை நாம் கொளரவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கொளரவிக்கப்பட்ட போஸ்ட் மேன் கலைமணி நான் 36 வருடங்களாக இந்த துறையில் உள்ளேன் என்றும் இங்கு கரூரில் மட்டும் 3 ½ வருடங்களாக பணிபுரிந்து வந்த நிலையில் இந்த பாராட்டு என்னுடைய துறைக்கு பெருமை சேர்த்து கொடுத்திருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment