தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக வாக்குகள் சேகரிக்க பாண்டவர் அணியினர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக பயணம் மேற்கொண்டு நாடக நடிகர்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
திருச்சியில் வாக்குகள் சேகரித்து
நடிகர்கள் பாண்டவரணியினர் நடிகர் கார்த்திக் தலைமையில் கரூரில் இரவு 07 மணிமுதல்
9.30 மணிவரை தேர்தலுக்காக நாடக நடிகர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். நடிகர்
பொன்வண்ணன், மூத்த நடிகர் ராஜேஷ், நடிகை கோவை சரளா, காமெடி நடிகர் கருணாஸ்,
குட்டிபத்மினி, ஜீனியர் பாலையா ஆகியோர் உள்பட பலர் இன்று இரவு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் அரங்கில்
நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த
நடிகர் பொன்வண்ணன் கூறும் போது நடிகர் கார்த்திக் குறிக்கிட்டு, தேர்தல் என்பது இப்போது தான் அறிவிக்கப்பட்டது.,
ஆனால் சென்ற வருடம் அக்டோபர் மாதமே திருச்சியில் உள்ள நாடக நடிகர் சங்க கூட்டத்தில்
நடிகர் ராதாரவி சினிமா நாய்கள் வருவார்கள் எனவும் அவர்களை அடித்து விரட்டுங்கள் என
சொல்லி தற்போது நடைபெறும் தேர்தலை போர்கலமாக ஆக்கியதே
ராதாரவி தான் என்றும், அதற்கு சரத்குமார்
எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது பெரிய தவறு என பொருளாளர் பதவிக்கு போட்டியிடும்
நடிகர் கார்த்திக் ஆவேசம் அடைந்தார். மேற்கொண்டு பேசிய பொன்வண்னன் கூறும் போது.,
தென்னிந்திய நடிகர்
சங்கத்தில் நடிகர் சங்கம் முதல் தயாரிப்பாளர் சங்கம் வரை சுமார் 27 உள்ளது. அந்த அனைத்து
சங்கங்களுக்கும் தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு முறை, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை
தேர்தல் நடப்பது வழக்கம், ஆக தேர்தல் எல்லா சங்கங்களுக்கும் நடக்கும் போது, எங்களது
நடிகர் சங்கத்திற்கு 10, 12 வருட காலமாக நடக்காதது ஏன், தேர்தலே நடக்காத எங்கள் சங்கத்தில்
தேர்தல் நடைபெற வேண்டுமென நாங்கள் போராடுவது எந்த விகிதத்தில் தப்பு, நடிகர் சங்க தேர்தலை,
தயாரிப்பாளர் சங்கம் தேர்தலை தவிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை. மேலும் ஒரு வேளை சமரசம் பேச்சில் ஈடுபட்டு அதற்கு
நாங்கள் ஒத்துப்போகாமல் தேர்தல் நடக்க வேண்டுமென்று சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால்
ஒரு அணியை மட்டும் தயாரிப்பாளர் சங்கம் ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை. நடிகர் சங்க
தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஓட்டுப் போடவோ, கலந்து கொள்ளவோ எந்த உரிமையும்
இல்லை என்றார். ஆனால் எங்களுக்கு தேர்தல் தேவையாக உள்ளது. எங்களது உறுப்பினர்கள் எங்களையோ,
அல்லது கடந்த முறை உள்ள நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்களுக்கு கொடுங்கள்
என உறுதி பட தெரிவித்தார்.
No comments:
Post a Comment