Monday, 2 November 2015

கரூர் அருகே பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த தக்காளி பாரம் ஏற்றி நின்ற மினி லாரி மீது மணல் ஏற்ற அதிவேகமாக சென்ற லாரி மோதி விபத்து – டிரைவர்கள் காயம் – சுமார் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் முற்றிலும் நாசம்



கரூரிலிருந்து சித்தலவாய்க்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற மினி லாரி மணவாசி சுங்கச்சாவடி முன்பு உள்ள கே.பி.குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஞ்சர் ஆகி நின்றது. இந்நிலையில் மணல் அள்ள அதிவேகமாக வந்த மணல் லாரி பஞ்சர் ஆகி நின்ற தக்காளி லோடு லாரி மீது மோதியதில் தக்காளி லாரியில் இருந்த தக்காளிகள் சுமார் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தன. இதை அள்ள மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவம் அறிந்த கரூர் ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தக்காளி அள்ளுவதற்கு மக்கள் கூட்டம் குவிந்ததையடுத்து, நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு பாதையை மாற்றி மற்றொரு பாதை வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை இயக்க வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் லாரி அருகே சாய்ந்ததையடுத்து அங்குள்ள கிரஷர் வைத்து மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் கூடலூர் டூ நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊரே சேர்ந்து தக்காளி அள்ளிய கூட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment