Monday, 2 November 2015

காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை மீட்டெடுக்க அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் சென்னையில் நவம்பர்.4-ல் நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு! தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுகோள்!! தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன்


காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை மீட்டெடுக்க அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் சென்னையில்  நவம்பர்.4-ல் நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுகோள் !! விடுத்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது.


காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகம் தொடர்ந்து மறுத்துவருகிறது. கர்நாடகாவின் வஞ்சகத்தால் 4வது ஆண்டாக தஞ்சை நெற்களஞ்சிய பூமி குறுவை சாகுபடியை தொலைத்துவிட்டது.

அத்துடன் நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கான உரிய நீரையும் கர்நாடகா திறந்துவிடாமல் துரோகம் செய்து வருகிறது. கர்நாடகா அணைகளில் முழு கொள்ளளவு நீர் இருந்தும் நமக்கான நீரை வேண்டுமென்றே தர மறுக்கிறது.

இதை தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசோ, வாய்மூடி மவுனியாக தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் அணை கட்டியே தீருவோம் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு சவால் விடுகிறது கர்நாடகா.

கர்நாடாவின் இந்த வஞ்சகத்தைக் கண்டித்தும், தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை உடனே திறக்க வலியுறுத்தியும்

காவியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகா கட்ட முயற்சிக்கும் அணை கட்டுமானங்களை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி

சென்னையில் தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் நாளை நவம்பர் 4-ந் தேதி புதன்கிழமையன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்

இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் கட்சி, ஜாதி, மத, இயக்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து தமிழர்கள் அனைவரும் நம் வாழ்வுரிமைக்கான இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அன்புடன் அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment