Monday, 9 November 2015

நரிக்குறவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய எம்.எல்.ஏ – கொட்டும் மழை என்றும் பாராமல் வீடுகளை இழந்தவர்களுக்கு தனது 54 வது மாத சம்பளத்தொகையினை தானமாக கொடுத்த எம்.எல்.ஏ எஸ்.காமராஜ்










தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து ஆங்காங்கே நிவாரண பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை தீவிரமாக செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஆர்.புதுக்கோட்டை பகுதியில் மல்லாண்டவர் கோயில் பகுதியில் 14 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின. இந்நிலையில் அந்த தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தகவலை அறிந்து உடனே அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு அந்த 14 நபர்களுக்கு தனது 54 வது மாத சம்பள தொகையை தானமாக கொடுத்தார். எந்த வித ஆடம்பரமின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர். மேலும் இதை தொடர்ந்து அப்பகுதியில் கழிவு நீர், மழைநீர் தேங்கி வந்தால் அதை உடனடியாக அரசு அதிகாரிகளுக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவியுங்கள் அம்மா, என்று அனைவரிடமும் எடுத்துக் கூறினார். ஏனென்றால் கொசுக்கள் பரவி மற்ற வியாதிகள் வருமாம், மேலும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாயனூர் அருகே உள்ள மணவாசி முடக்குச் சாலையில் குடிகொண்டிருக்கும், நரிக்குறவர் இன மக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு பாக்ஸ் களை கொடுத்ததோடு, அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி அவர்களிடமே தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் மற்ற நரிக்குறவர் இன மக்களும் கலந்து கொண்டதோடு, அவர்கள் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஹேப்பி டீபாவளி மாமா என்று எம்.எல்.ஏ விற்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னார்கள். இச்சம்பவத்தையடுத்து எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் வேண்டாம், அம்மா விற்கு சொல்லுங்கள் என்று அம்மாவிற்கு அட்வான்ஸ் ஹேப்பி டீபாவளி அம்மா மற்றும் சாமியோ என கோரசமாக கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் அ.தி,மு.க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு எம்.எல்.ஏ வுடனே தீபாவளியை கொண்டாடினார்கள். வார்டு கவுன்சிலர் ஆனால் கூட காரை விட்டு இறங்காத இன்றைய அரசியல் சூழ்நிலையில் நரிக்குறவர் இன மக்களிடம் அதுவும் ஒரு எம்.எல்.ஏ ஏழ்மையான முறையில் தீபாவளி கொண்டாடிய நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதோடு, மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது

No comments:

Post a Comment