Sunday, 8 November 2015

தொடர் பருவ மழை – பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு – பூக்களின் வரத்தும் குறைந்ததால் வியாபாரிகள் யாரும் வராததால் கலக்கத்தில் வியாபாரிகள் - தீபாவளி திருநாளை பூ வியாபாரிகள் கொண்டாடுவது சந்தேகம்




தென் மேற்கு பருவ மழை தமிழகத்தை கை கொடுக்கா விட்டாலும், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதோடு ஆங்காங்கே நல்ல விளைச்சலும், நல்ல மகசூலும் ஈட்டு தரும் வாயில் பல விவசாயிகளுக்கு உள்ளது. ஆனால் கரூர் மாவட்டத்தில் கரூர் ரயில் நிலையம்  அருகே குழந்தை வேல் சாலையில் அமைந்துள்ள கரூர் ஸ்ரீ மாரியம்மன் பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், சேலம், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் மட்டுமில்லாமல் கரூர் மாவட்டத்தில் மாயனூர், செட்டிப்பாளையம், தளவாப்பாளையம், லந்தக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, செவ்வந்திப்பூ, அரளி, மருவு, விருச்சிப்பூ, துளசி, சம்பங்கி ஆகிய பூக்களும் ஆன்மீக பூக்களும்,பொருட்களும் விற்பனைக்கு வருவது வழக்கம், அதே போல் இங்கிருந்து வியாபாரிகள் திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த பூக்கள் விலை சென்ற வாரத்தை விட மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளதாக கரூர் பூ மார்க்கெட் சங்க செயலாளர் கே.எம்.மோகன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடர்மழையால் தற்போது மல்லிகை 1 கிலோ ரூ 700 ஆகவும், முல்லைப்பூ ரூ 600 ஆகவும், ஜாதிப்பூ ரூ 400 ஆகவும், செவ்வந்தி ரூ 700 ஆகவும், விருச்சிப்பூ ரூ 80 ஆகவும், துளசி ரூ 50 ஆகவும், மருவு ரூ 80 ஆகவும், காக்கரட்டான் எனப்படும் பெங்களூரு மல்லிகை ரூ 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர்மழையால் மற்ற பூக்கள் விலை வரத்து குறைந்ததினால் இந்த விலை உயர்ந்த நிலையில், அரளி பூக்களானது வரத்து அதிகமானதால் விலை போக முடியாமல் திணறுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அரளி பூக்களானது 1 கிலோ ரூ 20, 30 என வித விதமாக விலை போவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்நிலை நீடித்தால் வியாபாரிகளான எங்களுக்கும், பூ விவசாயிகளுக்கும் தீபாவளி கேள்விக்குறியாகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment