Saturday, 7 November 2015

எங்கும் நிலவேம்பு நீர் ! எதிலும் நில வேம்பு நீர் பட்டையை கிளப்பும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி













பருவ மழை எதிரொலி - கரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு வீதி, வீதியாகவும் மக்களின் குறைகளை கேட்டும் ஆய்வு – மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள மக்களுக்கு அறிவுரை – அதிகாரிகளுக்கு உத்திரவு – இலங்கை அகதிகள் முகாமிற்கும் சென்று கலக்கினார் கரூர் கலெக்டர் ஜெயந்தி
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதையடுத்து, ஆங்காங்கே வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கொசுக்கள் அதிகமாக உருவாகும் காலம் இந்த மழை காலம் இது என்பதால் கரூர் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில் எங்கே எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் முதலில் நிலவேம்பு நீரை எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்து விட்டு பிறகு தான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார்.  இந்நிலையில் மாயனூர், மணவாசி, கரூர், தாந்தோன்றி மலை, இராயனூர், மார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி கரூர் தாந்தோன்றி மலை வெங்கடேஸ்வரா நகரில் முதல் கிராஸ், இரண்டாவது கிராஸ் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கே உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கும் சென்று மழை நீர் தேங்கியுள்ளதா என அதிரடி விசிட் அடித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வரும் போது யாரோ ஒரு பொண்ணு தாங்க வராங்க என்று அப்பகுதி முகாமில் வசிக்கும் பெண்மணி ஒருவர் கூறினார். இவ்வளவு எளிமையா தனிமையா எந்த வித ஆடம்பரமில்லாமல் நடந்த இந்த திடீர் ஆய்வு இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பகுதி மக்களிடையே பேசிய மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, அம்மா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இப்போது மழை காலம் ஆதலால் மழையால் நீர் தேங்கும், அந்த நீர் தேக்கத்தில் கொசுக்கள் உருவாகும் ஆதலால் நீர் தேங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மழை நீர் தேங்கினால், உடனே பாதுகாப்பு நலன் கருதி அருகில் இருக்கும் பள்ளியில் தங்கி கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அங்கே வசிக்கும் மக்களிடையே அடிப்படை வசதிகள் பற்றி கேட்டுக் கொண்டதோடு, அந்த மக்களிடையே குறைகளையும் கேட்டறிந்தார். மீண்டும் அங்கே இருந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியர் டேக் டைவர்சன் ஆகி கரூர் இராஜாஜி நகரில் மீண்டும் மீண்டும் பள்ளமாகி வரும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏன் இந்த திடீர் பள்ளம் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் உருவாவதையும் கேட்டறிந்ததோடு, அங்கே போக்குவரத்து துறையில் மாற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். இதைவிட எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி முதலில் அங்கே உள்ள நில வேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுத்து பிறகு தான் நிகழ்ச்சியை துவக்குகிறார் என்றால் பாருங்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து, நகராட்சி சார்பில் எதாவது நிகழ்ச்சி, மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி, கோ ஆப்டெக்ஸ் துவக்க விழா என்னும் பல நிகழ்ச்சிகளில் முதலில் நிலவேம்பு கசாயம் பிறகு தான் நிகழ்ச்சி என்று அவர் துவக்கி வைப்பதோடு, அவரும் குடிப்பதோடு, மற்ற அதிகாரிகளையும் கசாய நீரை குடிக்க வைக்கும் நிகழ்ச்சியும் கரூர் மாவட்டத்தில் தினந்தோறும் அரங்கேறுகிறது. எது எப்படியோ ஒரு வேளை டெங்கு காய்ச்சல் அறவே ஒழிந்தால் சரி என்கின்றனர், சமூக நல ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

No comments:

Post a Comment