தமிழகத்தில் தொடர்ந்து
பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையையடுத்து கடந்த சில வாரங்களாகவே மழையானது கரூர் மாவட்டத்தில்
விட்டு, விட்டு பெய்கிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தீபாவளி திருநாளையொட்டியும்
இன்று காலை 8 மணி வரை பெய்த மழையை அடுத்து பிறகு நன்கு வெயில் அடித்த நிலையில் கரும்பு
ஜீஸ் வியாபாரிகள் தங்களுக்கு இன்று தான் தீபாவளி என்று கருதி சாக்குகள் கட்டி பாதுகாப்பு
செய்யப்பட்ட கரும்பு பால் பிழியும் இயந்திரங்களை பிரித்து வேலை பார்க்க தொடங்கினர்.
இந்நிலையில் தீடீரென மதியம் நண்பகல் பெய்த மழை தொடர்ந்ததையடுத்து மீண்டும் தங்களது
இயந்திரங்களை சாக்குகள் போட்டு அடைத்தனர். எங்களுக்கு இந்த வருட தீபாவளி கருப்பு தீபாவளி
தான் என்று புலம்புகின்றனர். இப்பகுதி கரும்பு ஜீஸ் வியாபாரிகள். மக்கள் வாழ்வில் தற்போது
பெய்து வரும் பருவ மழை விவசாயிகளுக்கு நல்ல மழை பெய்து வருவதோடு, அவர்கள் வாழ்வில்
ஒளியேற்றிய தீபாவளி கரும்பை பிழிந்து வெயிலுக்கு இதமாக கொடுக்கும் சமானிய வியாபாரிகளின்
வாழ்க்கையில் கருப்பு தீபாவளி ஆக்கியது ஏனோ என்று தெரியவில்லை வியாபாரிகள் சோகம் விடிவு பிறக்குமா இவர்களுக்கு பொருத்து தான் பார்ப்போம் மழையின் தேகம்
No comments:
Post a Comment